விடுதலை பிறந்ததடா

January 5, 2009

செம்மொழியாய் இனித்திடவும்
சிதைப்போரை அழித்திடவும்
எம் மொழியும் கானாத
எழுச்சிதனை
அடைந்திடவும்

பிறந்ததடா
எம் தமிழ் பிறந்ததடா

காவிரிகள் காய்ந்து கிடக்க
கர்நாடகம் தர மறுக்க
வற்றாத வான்மழையாய்

பிறந்ததடா
எம் தமிழ் பிறந்ததடா

புனித புத்தன் தொடரினிலே
புரட்சி சிறுத்தை அம்பேத்கர்
பெரியாரின் பெரும் நிழலாய்

பிறந்ததடா
எம் தமிழ் பிறந்ததடா

வருமா வருமா விடுதலையென்று
வாய் பிளந்து நிற்கையிலே

பிறந்ததடா
எம் தமிழ் பிறந்ததடா

Advertisements

வேர் நனைப்போம்! – அறிவுமதி

January 5, 2009

எதையும் செய்து பிழைக்கலாம்
இழிவைத்
தமிழில்
விதைக்கலாம்
என்றே
துணிந்த
திமிரிலே
எத்தனை
எத்தனைத்
தொலைக்
காட்சி!
எல்லாம்..
எல்லாம்..
அன்னைத் தமிழைக்
கொன்று
முடிக்க
அவாள்கள்
கண்ட
கதிர் வீச்சு!

தமிழர் இல்லா
தொலைக்
காட்சி!
தமிழருக்கான
தொலைக்
காட்சி!

தமிழே
இல்லா
தொலைக்
காட்சி!
தமிழகத்தின்
இழிவாச்சு!
இழிவைத் துடைக்க
உருவச்சு…
எழிலாய்
‘மக்கள்
தொலைக்
காட்சி.!

மருத்துவர் கண்ட
தொலைக்
காட்சி!
தமிழ்
மருத்துவம்
பார்க்கும்
தொலைக்
காட்சி!

மக்கள் நலனே
அதன்
மூச்சு!
மானத்
தமிழே
பயிராச்சு!

முத்தமிழ் வளர்க்கும்
தொலைக்
காட்சி!
மூன்று
ஆண்டுகள்
வயசாச்சு!
தத்தித் தவழும்
வயதினிலும்
தடுமாறாத
செயலாச்சு!

இது
தொடர்ந்து
நடக்க
தோள்
கொடுப்போம்!

இது
படர்ந்து
செழிக்க
வேர்
நனைப்போம்!

அறிவுமதி

சேகுவேரா

January 4, 2009
சே- குவரே

சே- குவரே

உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே…… -சேகுவேரா