திருக்குறள்

June 29, 2009

“இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை, மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம், மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்” — ஜெயபாரதி.

திருக்குறள் எண்ற அற்புத நூலினை அனைவரும் நமது வாழ்வில் மேன்மை பெற பின்பற்ற வேண்டும். மதுரை தமிழ் இலக்கிய குழு அரும்பாடு பட்டு இணையத்தளத்தில் திருக்குறளை படைத்து உலகிற்கு கொடுத்திருக்கிறார்கள். அதனை நாம் இங்கு முழுமையாக காணலாம்.

திருக்குறளின் முழு பதிப்பையும் இங்கிருந்து உங்கள் கணினிக்கு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஒரு மிகச்சிறந்த வாழ்வியல் நூலான திருக்குறளின் முதல் அதிகாரத்தில் இருந்து சில குரல்களை இங்கு பதித்திருக்கிறேன்.

அறத்துப்பால்:

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

இணையத்தில் தமிழை உலகிற்கே பறைசாற்றிகொண்டிருகும் இந்த வலைக்கு என் மனமார்ந்த நன்றிகள்

Advertisements

நீ இல்லாத என் நாட்கள்.

June 28, 2009

யாரும் இல்லாத கடல் கரையில் நிற்கும் படகாய் என்னை உணர்ந்தேன்,
நீ இல்லாத என் நாட்களில்.

என் காதல்

February 23, 2009

நீ கோலமிடக்

குனிந்தபோது,

காற்றில் அசையும்

உன்

கூந்தலிலும்

காதலின் நளினம்!

வாசலில் மின்னும்

நீயிட்ட

புள்ளியெல்லாம்

நட்சத்திரமாய்!

தெருவெங்கும்

வளைத்து

வளைத்து நீ

வரைந்த கோலம்

விரிந்தது

வானவில்லாய்!

நீ கோலமிட்டு

நிமிரும் போதெல்லால்

உன் இடுப்பில்

வைரமாய்

வேர்வைத்துளிகள்!

நீ வாசல்

திரும்பும் முன்

பார்த்த

பார்வையில்

தெறித்தது

ஆயிரம் மின்னல்.

கொஞ்சம் கீழே பாரடி,

நீ பாதம் வைத்த

வாசல்

மண்ணெல்லாம்

தங்கத்துகள்களாய

மாறுவதை!!

உன் நாணத்தோடு

பூத்த

வேர்வை

வழித்து எரிகிறாய்,

பட்ட இடமெல்லாம்

அமுதமாய்.

கொஞ்சம் என்னைத்

திரும்பிப்பாரேன்,

நான் சுவாசித்துக்

கொள்கிறேன்

உன் காதலை!

என் காதல்

February 22, 2009

உனக்காகப் பிறந்தவள், உனக்கென்று ஒதுக்கப்பட்ட காதல் கணத்தில்…

சட்டென்று உன் கண் முன்னே தோன்றுவாள்.

அந்த தேவ நிமிஷத்தில் நீ தொலைந்துபோவாய்!.

உன் நண்பர்கள், அவளது வீதியில் தொலைந்துகிடக்கும் உன்னைக் கண்டெடுத்து வந்து உன்னிடம் கொடுப்பார்கள்.

அது அவர்கள் நட்பின் கடமை. உன் காதலின் கடமை என்ன தெரியுமா?

உன் நண்பர்கள் கொடுத்த உன்னை எடுத்துக்கொண்டு உடனே அவளிடம் ஓட வேண்டும்.

மீண்டும் தொலைப்பதற்காக!

முரண்டு பிடிக்கும் மரணம்!!!

January 18, 2009

எச்சமாய் இருக்கும்
வாழ்க்கையின்
மிச்சத்தை
தள்ளாடித் தீர்க்கிறான்
தடி ஊன்றும் கிழவன்!

உடல் தேய
உழைத்தவனின்
உள்ளங்கை ரேகைகள்
ஊமையாகிவிட்டன!

இந்த முதுமை
சோகங்கள்
அழியா கரையாய்
நெஞ்சுக் கூட்டில்
நெளிந்துக் கிடக்கிறது!

வேட்டி முடிய
கனக்கும் கைகள்!
அடுத்த அடிக்கு
முகம் சுழிக்கும் கால்கள்!
“டேய் கிழவா”
கேட்டு மந்தமான செவிகள்.
பகல் கூட இருட்ட
தொடங்கிவிட்டது கண்களுக்கு!

உறவுகள் சாதகமில்லை
உணர்வுகள் புரியவில்லை!
உணவு இறங்கவில்லை
உறங்கவும் முடியவில்லை!

மரியாதையை எதிர்பார்த்து
மானமும் போய்விட்டது!
வினாடிகளை எண்ணிக்
காலத்தைக் கரைக்கிறான்!
மரணம் இவனுக்கு
மட்டும் முரண்டு பிடிக்கிறது!

தமிழில் பேசுங்கள்

January 12, 2009
தமிழ்

தமிழ்

பொங்கலோ பொங்கல்!

January 12, 2009

அத்திவெட்டியில் ஓர் அழகிய பொங்கல்!

போகியில் தீயன போகி
யோகமும் போகமும் பொங்க

இல்லம் புதுப்பிப்பு
இரவல் பொருள் திருப்பி ஒப்படைப்பு

வசதிக்காரர் வீட்டில்
வண்ண வண்ண சாயங்களும்
வகை வகையான பொருட்களும்

நடுத்தர குடும்பம்
நமக்கு வெள்ளை மட்டும் தான்
நகை போதும் புன்னகை

ஏழை மக்கள்
ஏங்கி மொழுகினார் சாணத்தால்
ஏற்றம் வரும் என நம்பி

மதுக்கூர் சந்தையிலே
மஞ்சள் கொத்து,
வாழைத்தார்கள்
வகைவகையாய்
செங்கரும்பு வாங்கி
செழிக்க வைப்போம் -நம்
செவ்வேர் விவசாயியை

வறுத்தெடுக்க வாளை மீனும்
வகை வகையாய் காய்கறியும்

வண்ண வண்ண கொம்புச்சாயம்
வசீகரிக்கும் நெத்திசுட்டி

சின்ன சின்ன இதழ் தொடுத்த
சிங்கார மாட்டு மாலை

தேடித் தேடி வாங்கி வந்து
தேக்கி வைத்த நன்றிதனை
தெவிட்டத் தெவிட்ட தந்திடுவோம்

அதிகாலை பொங்கலன்று விழித்து
வீட்டை சுத்தம் செய்து கழுவி
விதவிதமாய் கோலங்களால் தழுவி
மங்கையர்கள் மகிழ்ந்து மகிழ்ந்து உலவி
மற்றவர்கள் இல்லங்களில் போய்
மகிழ்ந்து மகிழ்ந்து
கோலங்களைப் பார்ப்பர்
கூடிப் பேசி குதூகளிப்பர்.

சரியான நேரத்தில்
சரமாக கோடு திறந்து
தளமேடை அமைத்து
சாணத்திலே அருகம்புல் பிள்ளையார்
கிழக்குப்பக்கம் பார்க்கவைத்து
வாழைப்பழ சீப்பும், செங்கரும்பும், மஞ்சள் கொத்தும்
வழமை போல் சர்க்கரைப்பொங்கல் வெற்றுப்பொங்கல்
பொங்கி வரும் நேரந்தனில்
பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!
பொங்கலே பொலிக!!
பொங்கலே பொலிக!! -என்று
கூவிக் கூவிக் குதூகளிப்போம்

பொங்கிய பொங்கலுக்கு
மஞ்சள் கொத்தால்
மாலையிட்டு
ஞாயிறு தொழுது குடும்பத்தோடு
நன்றிக்கடன் தீர்த்துவைப்போம்.

ஆண்டிற்கு ஒருமுறை
அறுதியிட்டு கூறாவிட்டால்
அதனையும் மறந்து விடுவோமோ?

மறுநாள் மாட்டுப்பொங்கல்
மகிழ்வுடனே எதிர்பார்த்து
வருடமெலாம் திங்கும் வைக்கோலுக்கு
வசதியாய் விடைகொடுக்க
வந்தது பொங்கலென்று
வாரி வாரி அறுத்திடுவோம்
வயல்களிலே வளர்ந்த புல்லை

காலையிலிருந்து கால்நடைகளிடம்
கனிவுடனே நடந்துகொள்வோம்
களத்துமேட்டிலே நற்ப் புல்
கண்ட இடம் மேய்த்து
கானோடை ஓடை செவந்தான்,
சாமந்தி பிச்சினி ஒடப்பா
திரிகுளம் வீரையன்குளம் வன்னார்குளம்
தண்ணீர் காட்டி குளிப்பாட்டி
வீட்டுக்கு ஓட்டிவரும் முன்னே
செங்கல் மாவில் கோலமிட்டு
மங்கையர்கள்
மகிழ்வுடனே காத்திருப்பார் வரவேற்க
குங்குமமும் இட்டிடுவார்
கோலமிடும் பொற்ச்செல்வி
சங்கதனைக் கட்டிடுவார்
சரஞ்சரமாய் வண்ண மாலையும் இட்டு
செதுக்கப்பட்ட கூரிய
கொம்புக்கு வண்ணம் தீட்டி

பெரியவன் வைரவன் வனத்தில் பெற்ற
ஈச்சை மட்டை கசங்கை
மெல்லிய சுத்தியால் இழைத்து
மாவிலை வேப்பிலை பெரண்டை
ஆவாரம்பூ கன்னிப்பூ நெல்லிக்கொத்து
மாலையாய் தொடுத்து ஒற்றைப்படையில்
மகிழ்வுடனே மாட்டுக்கு மாலையிட்டு

பொங்கிய பொங்கலை ஊட்ட
தண்ணீர் நல்லெண்ணெய் அரப்பிட்டு
தண்ணீரிட்டு கழுவி
பொங்கலூட்டி வாய் கழுவி
தாரை தப்பட்டையோடு
பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!!
பொங்கலே பொலிக!
பொங்கலே பொலிக!! -என்று
போற்றிடுவோம் மாடுகளை என்றும்…

திட்டியதை சுற்றியும் போட்டு
மாட்டை தாண்டவிட்டு
கட்டிடுவோம் புது அச்சில்
கொட்டிடுவோம் புல்லதனை
தெவிட்டத் தெவிட்ட

பசியறியா விரதம் இன்று
விருந்தினரை உபசரித்து -பின்
பசியாறி விருந்தோம்பல் போற்றிடுவோம்

கண்ணுப் பொங்கலை
காணும்பொங்கலாய்
கன்னிப் பொங்கலாய்
கவின்மிகு கலைநிகழ்ச்சிகளும்
களித்திடுவோம் பிள்ளைகள் விளையாடக் கண்டு
காத்திடுவோம் தமிழர் பண்பாடு என்றும்…

யாரோ கூறியது

January 8, 2009

எப்போது சொல்லப்போகிறாய்…..?
என் கனவுகளை
நிஜமாக்கினாய் ….
என் கர்ப்பனைகளுக்குச்
சிறகு வரைந்தாய்….
என் கவிதைகளுக்குப்
புது அர்த்தம் தந்தாய்….
என் மனதின்
தாழ்ப்பாளை உடைத்துத்
தூள் தூளாக்கினாய்….
என் பெண்மையை
உணர வைதாய் ….
என் வெட்க்கத்தின்
வேர்களுக்குத் தண்ணீர்
ஊற்றினாய்…
என் தனிமைகளையும்
விட்டு வைக்காமல்
திருடிக் கொண்டாய்….
என் மெளனங்களைக் கூட
மொழி பெயர்த்தாய்…
என் நினைவுப் பெட்டகம்
மொத்தமும் நீயாகிப் போனாய்…
உன் நினைவினைத்
தவிர என்னில்
எதுவும் இல்லாமல் ஆக்கிவிட்டாய்..
உன் பெயரை மட்டுமே
சொல்லிப் பார்த்து
சிலிர்க்க வைத்தாய்….
என் மீதான உன் அன்பினை
உறவுகள் கூட கண்டு சொல்லிவிட்டன…
நீ மட்டும் ஏனடா….?
இன்னும் சொல்லவில்லை….?
எப்போது சொல்லப்போகிறாய்….?
நம் திருமணத்திற்குப் பிறகா….?

தமிழ் இசயின்மற்றுமொரு பெயர்

January 8, 2009

எங்கோ படித்தது

January 7, 2009

உனக்கென்று ஒரு கொள்கையை தேர்ந்துதெடுத்துக்கொள் இல்லாவிடில் எவனெவனோ சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் படியாகலாம்